மக்காச்சோளத்திற்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு திருச்சி எம்.பி யின் கோரிக்கை ஏற்று முதல்வர் அரசாணை

மக்காச்சோளத்திற்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு திருச்சி எம்.பி யின் கோரிக்கை ஏற்று முதல்வர் அரசாணை

வேண்டியது வென்றது!கோரிக்கை நிறைவேறியது! ஒருவிழுக்காடு செஸ் வரி எனப்படும் சந்தை வரி விதிப்பிலிருந்து மக்காச்சோளத்திற்கு விலக்களிக்கப்பட்டதாய் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், விவசாய பெருங்குடி மக்களின் சார்பாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நெல்லை தென்காசி விருதுநகர் தூத்துக்குடி மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் பெருமளவில் மக்காச்சோளம் சாகுபடி நடக்கிறது. இந்த மக்காச்சோளத்திற்கு ஒரு விழுக்காடு செஸ் வரி விதித்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்றும், அதனை நீக்க வலியுறுத்தியும், அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதி அடிப்படையில் திராவிட மாடல் முதல்வராக திகழும் அண்ணன் தளபதி அவர்களை கடந்த மாதம் இரண்டாம் தேதி நேரில் சந்தித்து மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு விழுக்காடு செஸ் வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்து, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். 

அதற்கு முன்பாக ஜனவரி 28 அன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் அன்புச் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து இதே மக்காச்சோளத்திற்கான எனது கோரிக்கையை அளித்திருந்தேன்.அதற்கு பிறகு, ஜனவரி 30 ஆம் தேதி மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் அண்ணன் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களையும் மாண்புமிகு நிதி அமைச்சர் அண்ணன் திரு தங்கம் தென்னரசு அவர்களையும் சந்தித்து இந்த கோரிக்கையை தெரியப்படுத்தினேன்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக 02.03.2025 அன்று பெரம்பலூரில், மதிமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், தமிழ் நாடு அரசுக்கு விவசாய பெருங்குடி மக்களின் சார்பாக இக்கோரிக்கையை வேண்டுகோளாக வைத்தேன். அதன் பலனை இதோ இன்று அறுவடை செய்திருக்கிறது தமிழ்நாடு.  ஒரு விழுக்காடு செஸ் வரி எனப்படும் சந்தை வரி விதிப்பிலிருந்து மக்காச்சோளத்திற்கு விலக்களிக்கப்பட்டதாய் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு மக்காச்சோள விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள். 

கடினமான இந்த அரசியல் பயணத்தில் சோர்வு ஏற்படும்போதெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு இதுபோன்ற பணியினால் ஏற்படக்கூடிய நல்வாய்ப்புகளை கருதி நான் பெருமிதம் கொள்கிறேன். மன மகிழ்ச்சி அடைகிறேன். இதனையே பெரும் உத்வேகமாக எடுத்துக்கொண்டு என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்கிறேன்.  மீண்டும் முதல்வர் அவர்களுக்கும் துணை முதல்வர் அவர்களுக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் மக்காச்சோள விவசாயிகளின் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்று திரு.துரை வைகோ அவர்கள் கூறினார் 

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision