வேளாண் அறிவியல் மையம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பயிற்சி

வேளாண் அறிவியல் மையம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பயிற்சி

 சிறுகமணி வேளாண் அறிவியல் மையம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பயிற்சி 08.10.2022 அன்று லால்குடியில் மணிகண்டன் தோப்பில் நடைபெற்றது.  

நிகழ்ச்சியில் பண்ணைகழிவுகளிலிருந்துஉரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்மற்றும் அனைத்து வகையான கழிவுகளையும் பாதுகாப்பாக அகற்றுதல் பற்றிகுறித்து விளக்கப்பட்டது.

 நிகழ்ச்சிக்கு லால்குடி நகராட்சி ஆணையர் வி.குமார் தலைமை வகித்து, குப்பையில்லா நகராட்சிக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கி, தூய்மை இந்தியா பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். சிறுகமணி வேளாண் அறிவியல் மையவிஞ்ஞானி Dr.ச.நித்திலா பண்ணை கழிவு மேலாண்மை மற்றும் பயிர் உற்பத்தித்தினை அதிகரிக்கும் பண்ணை கழிவு உரம் பற்றி பயிற்சி அளித்தார். நகர்ப்புற மக்களுக்கு, சமையலறை கழிவுகளை உரமாக்குவது குறித்தும் விளக்கினார்.

வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுப்பதை வலியுறுத்தி பிரச்சாரம் மற்றும் ஊர்வலமும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வாழை மற்றும் நெல் விவசாயிகள், பெண்கள், எல்.அபிஷேகபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, துப்புரவுத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 10வது வார்டு ஆலோசகர் திரு.மாரிமுத்து வரவேற்றார். உழவர் மன்றத் தலைவர் திரு.வீரசேகரன் நன்றியுரை வழங்கினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO

.