ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் விரைவில் திறப்பு

ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் விரைவில் திறப்பு

திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பொது மக்களின் பிரச்சினைகளை உடனே தீர்க்க பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட உள்ளது

 தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது அதன் அடிப்படையில் திருச்சியல் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

 இதன் மூலம் சத்திரம் பேருந்து நிலையத்தில் பஸ் நிலைய டெர்மினல் உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய சாலையோர பூங்காக்கள் நகரை அழகுபடுத்த நடைபாதைகள் விரிவுபடுத்தியும் சாலைகளை விரிவுபடுத்தியும் கலைநயமிக்க சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

 இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி அலுவலக கட்டிடத்தின் பின் பகுதியில் பிரமாண்ட அமைப்பில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது தமிழகத்தில் சென்னை கோவை அடுத்து திருச்சியில் இந்த மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தின் முன்பகுதியில் வரவேற்பு அறை மற்றும் ஆலோசனை கூட்டம் அதற்கடுத்து கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் நான்கு மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்டமாக‌ எல்இடி அமைக்கப்பட்டுள்ளது.

 இதன் மூலம் நகரின் முக்கிய இடங்களில் துல்லியமாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நடக்க உள்ளது.

 இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த காட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது இந்த மையத்தில் இருந்து மாநகரில் சத்திரம் பஸ் நிலையம் மத்திய பஸ் நிலையம் மற்றும் காளியம்மன் கோயில் எதிரே உள்ள உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில்5 கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதன் மூலம் இந்த மையத்தில் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வரும் நிலையில் அங்கிருந்து சர்வர் மூலம் தகவல்களை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுமையதிற்கு பெறப்பட்டு அதனை காவல்துறை மூலம் கண்காணிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

 இது குறித்து விரைவில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாநகரின் முக்கிய இடங்களில் எமர்ஜென்சி கால் பாக்ஸ் அமைக்கப்படும் இதில் வீடியோ திரையுடன் கூடிய காலர் பாக்ஸ் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஏதேனும் குறைகள் இருந்தாலும் (எந்தவித பிரச்சனையாக) இசிபியில் ஆன் பட்டனை அழுத்தினால் குறைகள் தெரிவிப்போர் முகம் கட்டுப்பாட்டு மையத்தின் திரையில் தெரியவரும் அதன் மூலம் மாநகராட்சி அல்லது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் இவ்வாறு கூறினர்.

 விரைவில் இந்த மையம் திறந்துவைக்கப்படவுள்ளது.

 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO