அமைச்சர் மகன் போட்டியிடும் தொகுதி - உடன்பிறப்புகள் உற்சாகம்

அமைச்சர் மகன் போட்டியிடும் தொகுதி - உடன்பிறப்புகள் உற்சாகம்

பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் இரு கட்சியினருக்கு தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு திருச்சியில் போட்டியிடுவாரா அல்லது பெரம்பலூர் போட்டியிடுவாரா என்று தொடர்ந்து குழப்பம் எழுந்து வந்தது. தற்பொழுது தொழிலதிபர் அருண் நேரு பெரம்பலூரில் தான் போட்டியிடுகிறார் என்பது உறுதியாகி உள்ளது. அருண் நேரு உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஏற்கனவே பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முக்கிய பிரமுகர்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் பணிக்கான டி-சார்ட் ஆர்டர் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் திமுகவினர் பெரம்பலூர் தொகுதியில் தீவிரம் காட்டியுள்ளனர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது அருண் நேரு என்பது உறுதியான நிலையில் அவரது ஆதரவாளர்களும் திமுக உடன் பிறப்புகளும் பெறும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு விடுதலை சிறுத்தை கட்சி, எம்பி ராசா ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி சீட் கேட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவை அனைத்திற்கும் தற்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichyvision