திருச்சி விமான நிலையத்தில் 'கூரியர் கார்கோ" வசதி விரைவில் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் 'கூரியர் கார்கோ" வசதி விரைவில் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் கார்கோ மற்றும் கூரியர் சேவை நிறுவனங்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்குனர் ஞானேஸ்வர ராவ் தலைமை வகித்தார். இதில் கூரியர் கார்கோ சேவை சாத்தியக்கூறுகள் குறித்து பேசப்பட்டது கார்கோ நிறுவனங்கள்

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்தும் பேசப்பட்டது. கட்டண குறைப்பு இந்த சேவையில் உள்ள வெளிநாடுகள் பட்டியல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது இதில் 30-க்கும் மேற்பட்ட கார்கோ நிறுவனம் பிரதிநிதிகள்

கலந்து கொண்டனர். சுங்கத்துறை சார்பில் சில கருத்துக்கள் மற்றும் குறைபாடுகளும் தெரிவிக்கப்பட்டது.கூரியர் கார்கோவுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தும் சில காரணங்களால் இன்று வரை தொடங்கப்படாமல் உள்ளது.

மேலும் கொரியர் சேவை தொடங்க நாலு நிறுவனங்கள் முன்வந்து பதிவு செய்து அதற்கான சான்றிதழை பெற்றுள்ளன.இது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் அனுமதி பெற கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் விரைவில் குரியர் கார்கோ சேவை தொடங்கப்படும் ஓரிரு மாதங்களில் சேவை தொடங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision