திருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்!!

திருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்!!

Advertisement

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் திமுக தேர்தல் பிரச்சாரங்கள் பல்வேறு விதமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 46வது வார்டு பெரிய மிளகுபாறையில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் திமுக தேர்தல் விளம்பரம் இடம் பெற்றிருக்கிறது. மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் விளம்பர பதாகைகளில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் படம் இடம் பெற்றிருக்கிறது. இது மட்டுமின்றி "ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு" என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. 

Advertisement

பொதுவாக வணிகர்கள் கடையில் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலை வித்தியாசமான முறையில் வாக்காளர்களை கவர்வதற்காக திமுக சார்பில் இந்த பிரச்சார பதாகை கையாளப்பட்டிருக்கிறது. திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட இந்த பகுதியில் மளிகை கடை, டிபன் கடை, இறைச்சிக் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பெயர் குறிப்பிட்டு திமுக தேர்தல் பிரச்சாரம் வாசகத்தோடு இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd