திமுகவின் இளம் வேட்பாளர் - யார் இவர்?
அரசியல் இன்றி எதுவும் கிடையாது என்பது இக்காலத்தின் நிதர்சன உண்மை. அனைத்திலும் அரசியல் இந்த அரசியல் ஆசை யாருக்குத்தான் இல்லை. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அரசியல் ஈடுபட வேண்டும் என்பது ஒரு விருப்பமாக உள்ளது. மாவட்ட செயலாளர், சட்டமன்ற, உறுப்பினர், அமைச்சர், எம் பி போன்ற பதவிகளை வகிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை. அதனால் அரசியல் கட்சியில் தீவிரமாக இளைஞர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவில் பல அனுபவமிக்க மூத்த அரசியல்வாதிகள் இருக்கும் நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த வயதுடைய இளம் வேட்பாளர் திருச்சியைச் சேர்ந்தவர். திமுகவின் முதன்மை செயல்படும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்கான அறிவிப்பை நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் அனுபவமிக்க நபராக இருப்பவர் கே.என்.நேரு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்பொழுதும் அமைச்சர் என்று அழைக்கப்பட கூடியவர். இதுவரை திமுகவில் எந்த பொறுப்பும் வகிக்காமல் அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருந்த அருண்நேரு தற்போது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு முன்னதாக கடந்த ஒரு வருடங்களாக அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது அடையாளத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் இளம் வயது உடைய வேட்பாளராக அருண் நேரு உள்ளார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு விபரம் :
பெயர் : கே.என். அருண் நேரு
பிறந்த தேதி : 12.12.1983
வயது : 40
தகப்பனார் பெயர் : கே.என். நேரு
தாயார் பெயர் : சாந்தா
மனைவியின் பெயர் : தீபிகா அருண்
குழந்தைகள் : 2 பெண் குழந்தைகள்
உடன் பிறந்தவர்கள் : 2 சகோதரிகள்
படிப்பு : M.S (Construction Management) OPM, Harvard University.
தொழில் : விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகம் - இலால்குடி
சொந்த ஊர் : காணக்கிளியநல்லூர், இலால்குடி, திருச்சி மாவட்டம்