பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து திருச்சிக்கு வந்த வெளிநாட்டு பறவைகள்

பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து திருச்சிக்கு வந்த வெளிநாட்டு பறவைகள்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள கிளியூர் குளத்துக்கு ஏராளமான அரிய வகை வெளிநாட்டு பறவைகள் தற்போது வந்துள்ளன. பொதுவாக பறவைகள் உணவு தேடியும் தட்பவெப்ப சூழ்நிலை மாறுபாடுகளை எதிர்கொள்ளவும் பல்வேறு நீர்நிலைகளை தேடி ஆண்டு தோறும் வலசை வருகின்றன.

பல்லாயிரம் மயில் தூரத்தைக் கடந்து பறவைகள் வலசை போவதற்கு முதன்மையான காரணங்களை ஒன்று உணவு தேடல், மற்றொன்று தங்கள் வாழும் இடத்தில் குளிர்காலத்தில் கடும் குளூரிலிருந்து தப்பிக்க நீண்ட தொலைவிற்கு நாடு விட்டு நாடு இடம் பெயரும் பறவைகளை தான் வெளிநாட்டு பறவைகள் என்கின்றோம். இவை இனப்பெருக்கத்திற்கு மீண்டும் தங்கள் தாயின் நிலம் திரும்புகின்றன.

தற்பொழுது கிளியூருக்கு ஐரோப்பா கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் இருந்து ஆண்டு தோறும் வழக்கமாக வலசை வரும் ஊசிவால் வாத்து, நீலச்சிறவி வாத்து, ஆண்டி வாத்து, கருவால் மூக்கன், பழுப்பு கீச்சான்கள் உள்ளிட்ட பறவைகள் வந்து குவிந்துள்ளன.

இது போன்ற உள்நாட்டுக்குள் குறைந்த தொலைவு வலசை செல்லும் பறவைகளான கூழைகடாக்கள், நத்தைக்கொத்தி நாரைகள், அரிவாள் மூக்கன்கள், மஞ்சள் மூக்கு நாரை, மீசை ஆலாக்கன், தகைவிலான்கள், குள்ளத்தாராக்கள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வலசை வந்துள்ளன.

கிளியூர் குளத்தில் தற்பொழுது நீலச்சிறகி, ஆண்டி வாத்து, சீழ்க்கை சிறகி, ஊசிவாள்வாத்து உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் இருக்கின்றன. இவ்வாறாக நீண்ட தொலைவு இடம் பெயர்ந்து வரும் பறவைகள் யாவும் நீர்பறவைகளே. மேலும் இவற்றின் வாழ்வாதாரம் நீரே சார்ந்தே உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO