தமிழக ஆளுநரை நேரில் சந்தித்த  ஏபிவிபி அமைப்பினர்

தமிழக ஆளுநரை நேரில் சந்தித்த  ஏபிவிபி அமைப்பினர்

ஏபி விபி என் தேசிய செயலாக்கு குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் மற்றும் தென் தமிழக மாநில செயலாளர் கோபி தேசிய செயற்குழு உறுப்பினர்  மனோஜ் பிரபாகர் ஆகியோர் இன்று ஆளுநர் ரவியை நேரில் சந்தித்தனர்.

 சந்திப்பின்போது தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மற்றும் அமல்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை தேவை என கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழகத்தின் நவோதயா  பள்ளியின் தேவை குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது சமீபத்தில் ஏபிவிபியின் 68வது அகில பாரதிய மாநாடு  நவம்பர் 25 முதல் 27 வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது.

மாநாட்டில் ஐந்து வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்  ஆளுநர் அவர்களிடம் வழங்கப்பட்டது தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்த மத்திய மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்குவது.

பாரதிய மொழி கல்வி தொடர்பாக மாணவர் சேர்க்கை தேர்வு மற்றும் முடிவுகளில் உள்ள முறைகேடுகள் குறித்து, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக உலக அரங்கில் இந்தியாவின் முக்கிய பங்கு தொடர்பாக போன்ற தீர்மானங்கள்.

தமிழகத்தில் தற்போது இருந்து வரும் கல்விநிலை குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது தமிழகத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஏ பி வி பி சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

    
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO