கறிக்கோழி விற்பனையை நிறுத்தி போராட்டம் - தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.
தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பின் வருடாந்திர பொதுக்குழுகூட்டம் மாநிலத்தலைவர் துரைராஜ் தலைமையில், மாநில செயலாளர் சுந்தரலிங்கம் முன்னிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இருந்து கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில்... மகாவீர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் மற்றும் வள்ளலார்தினம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தினங்களில் கறிக்கடைகள் செயல்பட தடைவிதிப்பதை தவிர்த்து,
சென்னையில் இதுபோன்ற முக்கியதினங்களில் கோவில்களை சுற்றிலும் 100 மீட்டர் தொலைவிற்கு இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்ற நடைமுறையை தமிழகம்முழுவதும் அமல்படுத்தி, பொதுமக்களின் உணவுஉரிமை மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
மேலும் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடு, மாடுகளுக்கு 24 மணிநேரத்திற்கு முன்பே தீவனம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. அதுபோல கறிக்கோழிகளுக்கு 12 மணி நேரத்திற்குமுன்பே தீவனம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்ற அரசின்உத்தரவை, தமிழ்நாடு பிராய்லர் கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு, வரும் 20ம் தேதிக்குள் அமல்படுத்தவேண்டும்.
இல்லாவிட்டால் வருகின்ற டிசம்பர் 21, 22ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் கறிக்கோழி விற்பனையை நிறுத்தி அடையாள போராட்டம் நடத்துவோம் என்றும் தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் துரைராஜ் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவிப்பு வெளியிட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision