வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு- அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு- அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகைதந்து சுவாமி தரிசனம் செய்தார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது,

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடு முறை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் சீராக இயங்காததால் பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டிய இருப்பதை கருத்தில் கொண்டும் இவ்வறிவிப்பு செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தொடர்ந்து கொரானா நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் முதல்வரின் ஆணைக்கிணங்க செயல்படும் மருத்துவ வல்லுனர் குழுவின் சுற்றறிக்கை பொருத்து ஊரடங்கு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ,மேலும் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே ஆன மோதல் போக்கு அதிகரித்து வருவதாகவும் கோரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காததால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் தங்களின் வீடு மற்றும் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் கவரப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறந்தவுடன் அது பிரதிபலிப்பதால் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது.

மேலும் இதனை தடுப்பதற்கு முதல்வரின் ஆலோசனையின் பேரில் பள்ளி மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிக் கொணரும் பொருட்டு ஊஞ்சல் என்ற இதழும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு குழந்தைகளுக்கு தேன் சிட்டு என்ற இதழும் மற்றும் ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கு கனவு ஆசிரியர் இதழும் அறிமுகப் படுத்தப்பட்டு ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைக்க பள்ளி கல்வித்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து ஆங்காங்கே ஒருசில இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது

பெற்றோர்களுக்கும் பங்கு இருக்கின்றது. அதனால் தான் பள்ளிமேலாண்மை குழு மூலம் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காணவும் முடிவு எடுக்கப்பட கூடிய கட்டாயம் பள்ளி மேலாண்மை குழுவிற்கு இருப்பதாகவும் , பள்ளிகல்வி துறை அமைச்சராக மாணவர்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள்., தமிழக முதல்வர் சொன்னது போல் உங்களது கவனத்தை படிப்பில் மட்டும் தான் நீங்கள் செலவிட வேண்டும் இது போன்று மாணவர்கள் நடந்து கொள்ளும் போது, அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அறிவிக்கப்படும், அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபாடாதவாறு கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும், இதுவரை அரசு பள்ளியின் மாணவர்களின் சேர்க்கை ஏற்கனவே 47 லட்சம் பேர் இருந்தனர் தற்போது அதிகமாக 6 லட்சம் பேர் இதுவரை அதிகமாகவுள்ளதாகவும் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO