திருச்சி காவேரி மகளிர் சுயநிதி கல்லூரியில் ஆங்கில மன்றத்தின் மூலம்  மாணவர்களின் மொழி புலமையை மேம்படுத்தும் ஆங்கிலத்துறை

திருச்சி காவேரி மகளிர் சுயநிதி கல்லூரியில் ஆங்கில மன்றத்தின் மூலம்  மாணவர்களின் மொழி புலமையை மேம்படுத்தும் ஆங்கிலத்துறை

திருச்சி காவேரி மகளிர் சுயநிதி கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில துறையின் Aurora club என்ற ஆங்கில மன்றத்தின் வழியே மாணவர்களிடையே மொழி திறனை மேம்படுத்துவதற்காகவும் , தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கித் தருகின்றனர்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதலாமாண்டு  மாணவர்களுக்கு ஆங்கில துறை பற்றிய விளக்கத்தையும் மொழி பற்றிய தெளிவையும் உருவாக்குவதற்கான  Foundation English Course என்ற தலைப்பில் 6 நாட்கள் நடைபெறும் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. AOEL ( AURAL ORAL ENGLISH LAB) ஜுலை 2019ல் தொடங்கப்பட்டது.

இக்கல்லூரியில்  ஒவ்வோராண்டும் கிறிஸ்தவம், இந்து, முஸ்லிம் என்ற இனபாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற ஒருமைப்பாட்டு உணர்வினை மாணவர்கள் வெளிப்படுத்தும் வகையில் கிறிஸ்மஸ், ரமலான், பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டு TRIPLE FIESTA என்ற தலைப்பில் முப்பெரும் விழா நடைபெறும்.

இந்த மன்றத்தின் அடுத்த முயற்சியாக முதுகலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி  
"Reflections on the English Literature of Northeast " என்ற தலைப்பில் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். IQAC & Aurora ஆசிரியர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் integrating Classroom Practice and Research என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம் ஆசிரியர்களுக்கு உத்வேகம்  அளிக்கும் வகையில் அமைந்தது. 

கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளிலும்  கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று கோப்பையை பென்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக  நண்பர்கள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு  கவிதை போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும்
இணையவழியில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn