திதி கொடுக்கும் இடமாக மாறிய மாநகராட்சி பூங்கா- அதிகாரிகளுக்கு தெரியுமா?
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு பெற்றது இந்த மாதத்தில் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றது. இந்நாளில் இறந்த மூதாதையர்கள், உறவினர்கள் அவர்களுக்கு ஆற்றங்கரையோரம் திதி கொடுப்பது நல்லது.
அந்த வகையில் தற்பொழுது திருச்சி காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் இங்கு குளிப்பதற்கு மற்றும் திதி கொடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நீராடி திதி கொடுக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உட்பட்ட வார்டு என் 17 பீரங்கிகுளத்தெரு Dr. V. K.ரங்கநாதன் பூங்காவில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் சிறுவர் சிறுமிகள் விளையாடவும், நடை பயிற்சி மேற்கொள்ள மட்டுமே அனுமதி உள்ள நிலையில், இன்று 50க்கும் மேற்பட்டோர் திதி கொடுத்துள்ளனர்.
அங்கு தற்காலிக கடை அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்துள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தது? இது பற்றி அதிகாரிகளுக்கு இதுவரை தகவல் தெரியவில்லையா? அல்லது அவர்களின் அனுமதியோடுதான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதா?. அரசுக்கு சொந்தமான இடத்தில் இப்படி தனி நபர்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வது முறையா?
ஆற்றங்கரையில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் இடமான பூங்காவில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி பூங்காவில் போதிய பாராமரிப்பு இல்லை, சமூக விரோதிகள் அட்டூழியம் என பல்வேறு குற்றச்சாட்டு எழும் நிலையில் தற்பொழுது இது செயல்களால் பூங்காவின் நிலைமை மாறி போயிடும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision