திருச்சியில் கோயில் தேர் திருவிழாவில் கல்வீச்சு - போலீஸ் வாகனம் உடைப்பு

திருச்சியில் கோயில் தேர் திருவிழாவில் கல்வீச்சு - போலீஸ் வாகனம் உடைப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது . சுமார் 40 அடி உயரம் உள்ள இரு தேர்களை பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து முக்கிய வீதி உலா வருவது வழக்கம். தேரில் மதுரை காளியம்மன், ஒலை பிடாரி அம்மன் அமர்ந்து அருள் பாலிப்பார். நேற்று
தேர் திருவிழாவில் வீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில் ஒரு தரப்பினர் பூத்தட்டு எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்துள்ளனர். அப்போது மர்ம நபர்கள் கூட்டத்தில் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது 2 போலீஸ் ஜீப்பின் கண்ணாடி மற்றும் இரு தனியார் வாகனத்தின் கண்ணாடியும் உடைந்தன. இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார் அங்கிருந்த தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO