திருச்சியில் அதிவேகமாக வந்த ரயிலை ஆற்று பாலத்தில் மறித்து விவசாயிகள் திடீர் போராட்டம் - விவசாயிகள் கைது

திருச்சியில் அதிவேகமாக வந்த ரயிலை ஆற்று பாலத்தில் மறித்து விவசாயிகள் திடீர் போராட்டம் - விவசாயிகள் கைது
பஞ்சாப் காவல்துறை, மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாபில் விவசாய சங்க தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கண்டித்தும்,பாரத பிரதமர் மோடி , பாரதிய ஜனதா கட்சியும் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுடன் 50 % சேர்த்து M.S. சாமிநாதன் குழுவின்
அறிக்கையின்படி விலை நிர்ணயம் செய்யப்படும், கொள்முதல் செய்யப்படும் என வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று 12 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றாமல் இருந்து வருவதை கண்டித்தும், கோரிக்கை நிறைவேற்றக் கோரியும் மத்திய அரசை கண்டித்து திருச்சி காவிரி ரயில் பாலத்தில் வைகை அதிவிரைவு ரயில் மறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்டம்நடத்தினர். தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு விவசாய சங்கம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அதிவேகமாக வந்த வைகை ரயிலை காவிரி ரயில் பாலத்தில் நடுவே நின்று
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை அதிவிரைவு ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்
20 நிமிடம் காவிரி பாலத்தில் ரயில் நின்றது. விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision