புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு சிறப்பு இரயில் இயக்கக் கோரிக்கை

புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு சிறப்பு இரயில் இயக்கக் கோரிக்கை.ஒரு மாதம் முழுதும் நோன்பு இருந்து ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னை செல்லும் மக்களுக்கு பயன்படும் வகையில், மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில்,திருச்சியிலிருந்து
தாம்பரம் வரையும் மற்றும் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை வழியாக எழும்பூர் வரையும் செல்லும் இரண்டு சிறப்பு இரயில்களை, இரண்டு வழிகளிலும் சென்று திரும்பும் படி இயக்கித்தர தென்னக
இரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளேன். அதனை குறிப்பிட்டு திருச்சி மற்றும் மதுரை இரயில்வே கோட்ட மேலாளர்களிடம் அலைபேசியிலும் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தேன். பரிசீலனை செய்துவிட்டு ஏற்பாடு செய்வதாக கூறினார்கள். என்று துரை வைகோ அவர்கள் கூறியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision