மேகத்தாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயிகள் போராட்டம்

மேகத்தாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயிகள் போராட்டம்

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகத்தாட்டில் அணை கட்டக் கூடாது, மத்திய அரசும் அதற்கு அனுமதிக்க கூடாது என்றும், மாநிலங்களுக்கிடையிலான நல்உறவுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை ஒன்றிய அரசு  கண்டிக்க வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள பயிர் காப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், காவேரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படி தமிழ்நாட்டிற்கு கர்நடகாவிலிருந்து உரிய நீரை ஒன்றிய அரசு பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி தலைமைத் தபால் நிலைய வாயிலில்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசுசையும் அதைக் கண்டிக்காத மத்திய அரசையும் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பச்சைக் கொடி ஏந்தியபடி முழக்கமிட்டனர். 

முன்னதாக  கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பச்சைக் கொடியுடன் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்த காரணத்தால் தலைமைத் தபால் நிலையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I