விபத்தில் காயம் அடைந்த தூய்மை பணியாளர்களுக்கு நிதியுதவி

கடந்த 23.11.2022 அன்று ஏர்போர்ட் பகுதி நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் ஓரமாக உள்ள மண்ணை சுத்தம் செய்யும்போது தூய்மை பணியாளர்கள் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட நான்கு பேர் மீது அந்த வழியாக வந்த தனியார் வாகனம் மாநகராட்சியின் பேட்டரி வாகனம் மீது மோதியதில் சிறு காயங்கள் ஏற்பட்டது விபத்தில் பாதிக்கப்பட்ட நான்கு தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணத் தொகையை மாண்புமிகு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்கள் அரசு மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு அவர்கள் தலா பத்தாயிரம் வீதம் காசோலையாக வழங்கினார்.
உடன் மாநகராட்சி ஆணையர் மரு .இரா. வைத்திநாதன் மண்டல தலைவர் பு. ஜெயா நிர்மலா, உதவி ஆணையர் திரு.அக்பர் அலி மற்றும் பலர் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO