செங்கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மூத்த மலைக்கோட்டை திமுகவின் கோட்டை திருச்சியில் கமலஹாசன் பேட்டி
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இணைந்து மதிமுக போட்டியிடுகின்றது. இதில் திருச்சி வேட்பாளராக துரைவைகோ போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து இன்று மாலை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பிரச்சாரம் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூரில் போட்டியிடும் அருன் நேருவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் .
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மக்கள் நீதி மையத்தில் பொதுச் செயலாளர் அருணாச்சலம் மற்றும் கட்சியினர் அவரை திரளாக வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு வேட்டியளித்த கமலஹாசன்... தேர்தல் ரொம்ப சிறப்பாக உள்ளது. இந்தியாவில் பழைய கோட்டைகளில் ஒன்று செங்கோட்டை பாரத பிரதமர் யாராயிருந்தாலும் அங்க இருந்து தான் பேசுவார்கள்.
அதற்கும் மூத்தது இந்த செயின்ட்ஜார்ஜ் கோட்டை, இரண்டுக்கும் மூத்தது திருச்சி மலைக்கோட்டை. அந்த கோட்டை DMK கோட்டையாக உள்ளது. அந்த கோட்டையில் எனக்கு கதவுகள் திறந்து இருக்கிறது. நான் வந்திருக்கிறேன் நாட்டை காக்கும் வேள்வியில் நானும் அங்கே உள்ளேன். திருச்சி திருப்பு முனை என்ற கூறுவார்களே என்ற கேள்விக்கு? மிகையான வார்த்தை அல்ல, நேர்மையான நம்பிக்கை என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision