துறையூரில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

துறையூரில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை கௌரி மஹாலில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சற்றே குறைப்போம் திட்டம் மற்றும் உணவு வணிகர்களுக்கு பதிவு/உரிமம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குறைந்த சர்க்கரை, குறைந்த உப்பு, குறைந்த கொழுப்பு குறைந்த அளவில் உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் உணவு கலப்படம் (DART) பற்றி பொதுமக்களும் மகளிரும் கண்டறியும் வண்ணம் செயல்முறை விளக்கமும், விழிப்புணர்வு முகாமும் உணவு வணிகர்களுக்கான பதிவு/உரிமம் 38 விண்ணப்பமும் பெறப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில வாழ்வதார இயக்கத்தின் சார்பாக கார்த்திகை செல்வி, வட்டார இயக்க மேலாளர் மற்றும் மகளிர் குழுக்களின் வட்டார இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் R .ரமேஷ்பாபு சிறப்புரை ஆற்றினார்

இந்த கூட்டத்தில் சுமார் 200 மகளிர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாலை 3மணிக்கு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 320 மாணவ மாணவிகள், கல்லூரி சேர்மன் பி.பெரியண்ணன், முதல்வர்.டாக்டர்.ராம வெங்கடேஷ், ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சுகந்தி உதவி பேராசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெங்கநாதன், இப்ராஹிம், வசந்தன், ஸ்டாலின், பாண்டி, செல்வராஜ், ஜஸ்டின் மற்றும் வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO