திருச்சியில் பண்டிகைக்கால கூட்ட நெரிசலை தவிர்க்க நான்கு இடங்களில் சிறப்பு பார்க்கிங் வசதி- திருச்சி மாநகர காவல் 

திருச்சியில் பண்டிகைக்கால கூட்ட நெரிசலை தவிர்க்க நான்கு இடங்களில் சிறப்பு பார்க்கிங் வசதி- திருச்சி மாநகர காவல் 
Photo credits : streets of trichy

மலைக்கோட்டை ,ஸ்ரீரங்கம் கோயில் போன்ற புகழ்பெற்ற அடையாளங்களைத் தவிர , திருச்சி அதன் மிகப்பெரிய ஷாப்பிங் உலகிற்கும் புகழ்பெற்றது.

 உண்மையில், திருச்சி அதன் பிரத்யேக ஷாப்பிங் தேர்வுகளுக்காக அருகிலுள்ள நகரங்கள் மற்றும் நகரங்களிலிருந்து தினசரி அடிப்படையில் ஏராளமான மக்கள் கூட்டம் வலம்வருவர்! 

ரெடிமேட் முதல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் வரை, பட்டுப் புடவைகள் முதல் நகைகள் வரை, மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கைவினைப் பொருட்கள் வரை அனைத்தும் - திருச்சியில் அனைத்தும் உண்டு!

 NSB சாலை, பிக் பஜார் தெரு மற்றும் சிங்கார தோப் ஆகிய மூன்றும் திருச்சி நகரத்தில் ஷாப்பிங்கின் முக்கிய மையமாக மதிக்கப்படும் மூன்று இடங்களாகும்.

கொரோனா தளர்வுள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகையும் சேர்ந்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் தங்களுடைய குடும்பத்தோடு ஷாப்பிங் செய்ய வருகின்றனர்.

 இந்நிலையில் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மக்களின் பாதுகாப்பு கருதியும் திருச்சி மாநகர காவல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் NSB சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக வாகனங்கள் நிறுத்துவதற்காக 3

நான்கு பார்க்கிங் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

1. பழைய குட்ஷெட் சாலை (FSM ஹைப்பர் அருகில்)

2. யானை குளம் மைதானம் (ஹோட்டல் சத்யம் அருகில்)

3. பிஷப் ஹீபர் பள்ளி (கட்டண பார்க்கிங்)

4. பனானா லீப் ஹோட்டல் அருகில் 

பொதுமக்கள் அனைவரும் இந்த வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்திக்கொண்டு நெரிசலை தவிர்க்கலாம்.