காலி மனைகளில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த 37 பேருக்கு நோட்டீஸ் - மாநகராட்சி நடவடிக்கை

காலி மனைகளில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த 37 பேருக்கு நோட்டீஸ் - மாநகராட்சி நடவடிக்கை

பருவமழை காலங்களில் திருச்சி மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிக்கப்படுவது வழக்கம். இதில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மாநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் காலி மனைகளில் தேங்கும் மழைநீர் மாதக்கணக்கில் வற்றாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து தொடங்கியுள்ளது. மழைகாலங்களில் தொற்றுநோய் பரவுவது ஒருபுறமிருந்தாலும் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் காலி மனையில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக காலி மனைகளில் மழைநீர் தேங்கி உள்ள 37 காலிமனைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தங்கள் இடங்களை தேங்கியுள்ள மழை நீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் இல்லையெனில் அதிக அபராதம் விதிப்பது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn