திருச்சியில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடியிலுள்ள இன்பன்ட் ஜீஸஸ் ஐ.டி.ஐ அருகே உள்ள முட்புதரிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளரால் மீட்கப்பட்ட, பெண் குழந்தைக்கு டையானா (பிறந்த தேதி : 18.04.2021 ) என பெயரிடப்பட்டு, 31.05.2021 அன்று திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு,
தற்காலிக வைப்பு ஆணை ( TEMPORARY CUSTODY ORDER ) பெறப்பட்டு, திருச்சி சாக்சீடு-புனித மார்டின் சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இக்குழந்தையின் பெயர் : டையானா
பிறந்த தேதி : 18.04.2021
குழந்தை தங்க வைக்கப்பட்டுள்ள தத்து நிறுவனம் : சாக்சீடு-புனித மார்டின் சிறப்பு தத்துவள மையம், திருச்சி.
மீட்கப்பட்ட இடம் : இன்பன்ட் ஜீஸஸ் ஐடிஐ கல்லூரியின் அருகிலுள்ள முட்புதர், கல்லிக்குடி, திருச்சி.
இவ்வறிவிப்பினை காண்பவர்கள் இக்குழந்தையை பற்றிய விபரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இருபத்தொரு நாட்களுக்குள்
திருச்சிராப்பள்ளி, குழந்தைகள் நலக் குழு அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
மேலும் அவ்வாறு தகவல் தெரிவிக்காவிடில் இக்குழந்தைக்கு சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று (Legally Free for Adoption ) வழங்கப்படும் என்பதை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தலைவர், உறுப்பினர்கள் குழந்தைகள்நலக்குழு, மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் திருமண மண்டபம் மாடியில், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி.
தொலைபேசி எண் : 04312413819 / 9629929412.
ஆர்.அனிதா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு
அலகு, N.E.1, மெக்டொனால்டு ரோடு,கலையரங்கம் திருமண மண்டபம் மாடியில், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி.
தொலைபேசி எண் : 0431-2413055 / 9486146528
மின்னஞ்சல் : dcpstrichy1@gmail.com
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC