"காவலர் வீரவணக்க நாள்-2022” - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
தமிழ்நாடு காவல்துறை இயக்குனரின் உத்தரவின்படி, காவலர் வீரவணக்க நாள்-2022 முன்னிட்டு காவல்துறை சார்பில் கட்டுரை போட்டி, ஓவியபோட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பிக்க வழங்கப்பட்ட அறிவுரைகளின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், அறிவுரைகளின்படி,
திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ‘மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு” (The Role of Police in Development of State) என்ற தலைப்பின் கீழ் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கட்டுரை போட்டியும், ‘காவல் பணிகள்” (Police Duties) என்ற தலைப்பின் கீழ் ஓவியப் போட்டியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்பேரில், திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் (15.10.22)-ம் தேதி காவலர் வீரவணக்க நாள்-2022 முன்னிட்டு மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் ‘மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு” என்ற தலைப்பின் கீழ் கட்டுரை போட்டியும், ‘காவல் பணிகள்” என்ற தலைப்பின் கீழ் ஓவியப் போட்டிகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் துவங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
மேலும் நடைபெற்ற கட்டுரை போட்டியில் 15 மாணவ - மாணவிகளும், ஓவியப்போட்டியில் 55 மாணவ - மாணவிகளும் என மொத்தம் 70 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். மேற்படி கட்டுரை மற்றும் ஒவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் திருச்சி மாநகர காவல் ஆணையகரம் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து
கட்டுரை மற்றும் ஒவிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ, மாணவியர்களுக்கும் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி, வெகுவாக பாராட்டினார்கள். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்திய பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.