ஆதரவற்று நின்ற 2 வயது குழந்தை உறவினரிடம் ஒப்படைப்பு

ஆதரவற்று நின்ற 2 வயது குழந்தை  உறவினரிடம் ஒப்படைப்பு

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை திருச்சி நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள ஒய் ரோடு பேருந்து நிறுத்தத்தில் பெயர் விலாசம் தெரியாத இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஆதரவற்று இருந்துள்ளதை கண்ட டிக்கெட் பரிசோதகர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். விரைந்த வந்த போலீசார் குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில் அழைத்து சென்றனர். இந்த குழந்தை குறித்து தகவல் தொிந்தவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து ஆதரவற்ற நிலையில் நின்ற குழந்தை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருவணைக்காவல் செக்போஸ்ட் அருகே உள்ள சரவணபுரம் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி மோகன்ராஜ் - தனலெட்சுமி மகன் என்பது தெரியவந்தது.

மேலும் கூலி வேலைக்காக சென்னை செல்வதற்காக பேருந்திற்காக உறவினர்களோடு இருந்த மோகன்ராஜ் - தனலெட்சுமி தம்பதியினர் உறவினர் ஒருவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார். பின்னர் குழந்தை விளையாடுவதற்காக கீழே இறங்கி விடப்பட்ட நிலையில் நீண்ட நேரம் கழித்து பேருந்து வந்ததும் குழந்தையை மறந்துவிட்டு அவசரத்தில் பேருந்தில் ஏறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் செங்கல்பட்டில் உணவகத்தில் பேருந்து நின்ற பின்னர் பெற்றோர்கள் குழந்தையை தேடியுள்ளனர். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் போலீஸ் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையின் உறவினர் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தையை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்பொழுது பெற்றோர் செங்கல்பட்டில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu