திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம்

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம்

திருச்சி மாநகர காவல் ஆணையா் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை 
நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், 
கெட்ட நடத்தைக்காரா்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொண்டும், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில், தமிழக முதலமைச்சரிடம் கொடுத்த நிலுவையில் உள்ள மனுக்களுக்கும், காவல் ஆணையர், துணை ஆணையர் ஆகியோர்களிடமும் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைத்திட வேண்டி முகாம்கள் (பெட்டிசன் மேளா) நடத்திட திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு காவல் ஆணையர் உரிய அறிவுரைகள் வழங்கினார்.

அதன்பேரில், திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட் சரகம் சார்பாக சரக 
அலுவகத்தில், கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர் அஜய்தங்கம் தலைமையிலும், ஸ்ரீரங்கம் சரகம் சார்பாக கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவி மினிஹாலில், ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் பாரதிதாசன் தலைமையிலும், தில்லைநகர் சரகம் சார்பாக உறையூர் காவல்நிலைலய எல்லைக்குட்பட்ட காவேரி திருமண 
மண்டபத்தில், தில்லைநகர் சரக காவல் உதவி ஆணையர் ராஜீ தலைமையிலும், காந்தி மார்க்கெட் சரகம் சார்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்விக் ஹோட்டலில் காவல் உதவி ஆணையர் ராஜசேகர் (SJHR) தலைமையிலும் கே.கே.நகர் காவல் சரகம் சார்பாக கே.கே நகர் காவல் நிலையம் மற்றும் ஏர்போர்ட் காவல் நிலையத்திலும் பாஸ்கர் காவல் உதவி ஆணையர் தலைமையிலும் நடைபெற்றது. இதில் அந்தந்த சரகத்திற்கு உட்பட்ட காவல் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி 
ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை 
தீர்த்துக்கொள்ளும் வகையில் மொத்தம் 180 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து 
பெறப்பட்டு, எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரணை செய்தும், அதில் 156 மனுவுக்கு 
தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மேல்விசாரணையில் உள்ளது. திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோதமாக 
செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்
தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO