திருச்சி டாஸ்மாக் கடைகளில் புகுந்த லஞ்ச ஒழிப்பு துறை சிக்கியது 90 ஆயிரம் ரூபாய் பணம் எப்படி?

திருச்சி டாஸ்மாக் கடைகளில்  புகுந்த லஞ்ச ஒழிப்பு துறை சிக்கியது 90 ஆயிரம் ரூபாய் பணம் எப்படி?

திருச்சியில் நேற்றிரவில் கண்டோன்மென்ட், கொட்டப்பட்டு, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் எலைட் மதுபானக் கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் ஒரு எலைட் கடையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள எலைட் மதுபானக் கடையில் கணக்கில் வராமல் 18 ஆயிரம் ரூபாயும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை நடத்தி 51 ஆயிரம் ரூபாயும்,கொட்டப்பட்டு மதுபான கடையில் 21 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரவு நடந்த சோதனையில் 90 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை மதுபானங்களை கூடுதலாக வைத்து விற்பனை செய்த தொகை ஒரு நாளைய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்.3 கடைகளில் பணிபுரிந்த மேற்பார்வையாளர்  உதவியாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision