"பரிட்சை எழுதி இருந்தாக்கூட நல்ல மார்க் எடுத்திருப்பேன்" - திருச்சி மாணவர் ஆதங்கம்!
தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 455 பள்ளிகளில்
35,539 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அரசு தேர்வை ரத்து செய்தது. இந்நிலையில் 100 சதவீத தேர்ச்சி வந்துள்ளது.
திருச்சி மாவட்டம் பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தச்சராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கணேஷ் திருச்சி புத்தூரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த வருடம் தீபாவளி முதல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் பகுதிநேர வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். காலை பள்ளிக்கு செல்வது மாலை வேளையில் டீ கடையில் வேலை செய்வதுமாக இருந்து என்னுடைய பள்ளிப் படிப்பை தொடர்ந்தார்.
தற்போது இந்தக் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த ஐந்து மாதங்களும் டீக்கடையில் முழுநேரமாக பணியாற்றி வருகிறார்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் குறித்து கணேசனிடம் பேசினோம்… திங்கட் கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சற்று பரபரப்பாக இருக்கும். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக டீ கடைகளை சொல்லவே வேண்டாம்! தன்னுடைய டீக்கடையில் பரபரப்பாக டீ போட்டுக் கொண்டே பேசினார்…
"காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் தான் எடுத்திருந்தேன். தற்போது இறுதித் தேர்வு நடந்து இருந்தால் நிச்சயமாக மேலும் கூடுதலாக நல்ல மதிப்பெண் எடுத்து இருப்பேன். இறுதித் தேர்வில் தான் அனைத்து பாடங்களையும் நன்றாக படித்து எழுத முடியும். தற்போது நான் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளேன். தேர்வு எழுதி இருந்தால் கண்டிப்பாக 350 மதிப்பெண் எடுத்து இருப்பேன். வருத்தமாகத்தான் உள்ளது. என்னுடைய மார்க்கின் அடிப்படையில் மேல்படிப்புக்காக காத்திருக்கிறேன் என்றார் டீ போட்டபடி….
தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 455 பள்ளிகளில்
35,539 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அரசு தேர்வை ரத்து செய்தது. இந்நிலையில் 100 சதவீத தேர்ச்சி வந்துள்ளது.