மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை உடனடியாக மீட்க வேண்டும் - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!
கேரளாவில் கனமழை கொட்டி வருவதால் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த இடைவிடாது பெய்த கன மழையால் கேரளாவில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதில் மூணாறு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இதுவரை 83 தமிழர்கள் உயிரோடு மண்ணில் புதையுண்டு உள்ளனர். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன உள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கேரள மாநிலம், இடுக்கி, மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் நடவடிக்கையை கேரள அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு அதனை வலியுறுத்த வேண்டும் என்பதையும், மீட்கப்பட்ட அவர்களின் உடலை விரைவாக தமிழகம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவிவரும் இந்த இக்கட்டான கால நிலையில் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.