மாத்தூர் காவல் நிலையத்தில் ஐஜி ஆய்வு: மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது:

மாத்தூர் காவல் நிலையத்தில் ஐஜி ஆய்வு: மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது:

திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மாத்தூர் காவல் நிலையத்தில் இன்று மத்திய மண்டல ஐஜி ஆய்வினை மேற்கொண்டார். காவல் நிலையங்களிலும் மற்றும் காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் ஐஜி கலந்துகொண்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் 19 காவலர்களும் மரம் நட்டு அதனை பராமரிக்குமாறு அறிவுறுத்தினார்.

மாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அதன் இயக்கங்கள் குறித்து ஆய்வு செய்தார் மேலும் மாத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் காவலர் குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் டிஐஜி பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை பொறுப்பு எஸ்.பி ஜியாவுல் ஹக், கீரனூர் டி.எஸ்.பி பிரான்சிஸ் மற்றும் மாத்தூர் இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.