திருச்சியில் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் கனரக வாகனங்களை இயக்கி பாலம் உடைப்பு! 20 கிராம மக்களின் போக்குவரத்து துண்டிப்பு!!

திருச்சியில் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் கனரக வாகனங்களை இயக்கி பாலம் உடைப்பு! 20 கிராம மக்களின் போக்குவரத்து துண்டிப்பு!!

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் கனரக வாகனங்களை பாலத்தில் இயக்கி கரைகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டதன் விளைவு- 20 கிராம மக்களின் போக்குவரத்து துண்டிப்பு- விவசாயிகளின் பாசன பரப்புக்கு வரக்கூடிய தண்ணீர் வந்து சேருமா என்ற அச்சம். என்ன நடந்தது?

பெருவளை வாய்க்கால் தலைப்பு பகுதியில் உள்ள பழமையான பாலம் இடிந்து விழுந்தது.
கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து பாசனத்திற்க்கு செல்லும் பெருவளை வாய்க்கால் தலைப்பு பகுதியில் உள்ள மதகு பாலம் இடிந்து விழுந்தது. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியுமா என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்..

திருச்சி முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றிலிருந்து புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் பெருவளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. பெருவளை வாய்க்கால் தலைப்பு மதகு 1934 ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பெருவளை வாய்க்கால் வாத்தலை பகுதியில் துவங்கி மண்ணச்சநல்லூர், சமயபுரம்,வழியாக புஞ்சை சங்கேந்தி பகுதியில் உள்ள 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள சங்கேந்தி ஏரி வரை சுமார் 39 கிலோ மீட்டர் தூரம் வரை செல்கிறது.

இந்த பெருவளை வாய்க்கால் மூலம் 19 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்கால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த ததால் குடிமராமத்து பணிகள் மூலம் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே வேலையில் பெருவளை வாய்க்கால் தலைப்பு மதகு பகுதியில் உள்ள பாலத்தின் கைப்பிடி சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதனை அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தின் மேல் உள்ள கைப்பிடி ( பக்கவாட்டு) தடுப்பு சுவர்களை சிமெண்ட் மூலம் பூசும் பணியில் ஈடுபட நேற்று சாரம் கட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று அந்த சுவர்கள் இடிந்து விழுந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேலை ஆட்கள் வேலை செய்யும் போது இடிந்து விழுந்திருந்தால் உயிர்சேதம் அதிகளவில் ஏற்பட்டிருக்கும்.


பல வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு குறுவை சாகுபடி பாசனத்திற்க்காக நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் 4 மதகுகள் கொண்ட இந்த பழமையான பாலம் இடிந்து விழுந்ததால் இந்த பெருவளை வாய்க்காலில் பாசன வசதி பெறும் 19 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்களில் குறுவை சாகுபடி நடைபெறுமா என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த பாலம்இடிந்து விழுந்த தால் வாத்தலை வழியாக செல்லும் கல்லூர், சென்னகரை, சித்தாம்பூர், நெய்வேலி போன்ற 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குணசீலம் 
வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது..

பல மாதங்களாக நடைபெற்று வரும் கிளை வாய்க்கால் கரைகளை பலப்படுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படும் கனரக வாகனங்களை பல தடவை அந்த பலவீனமான 86 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தின் மீது கொண்டு சென்றுள்ளனர். அந்த சாலையில் பள்ளமாகி பலவீனமான சுவர் இடிந்து விழும் நிலைக்கு இருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது .அந்த புகைப்படமே சுவர் இடிந்து விழுந்தற்கான சாட்சி. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் இந்த கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தது. இதனால் தற்பொழுது பெருவளை வாய்க்கால் தண்ணீர் திறக்கும் பணியில் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் 20 கிராம மக்களின் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர் .2018 ஆம் ஆண்டு இதே போல் கொள்ளிடத்தில் 2 லட்சம் கன அடி நீர் வந்த பொழுது வேகமாக ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து ஷெட்டர்களை மூடிய போது தான் அந்த ஒன்பது மதகுகளும் உடைந்தது எனவும் விவசாயிகள் குற்றச்சாட்டாக இன்றுவரை உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் நடந்து கொள்ளாமல் தொடர்ந்து விவசாயிகளும் பொதுமக்களும் அரசிற்க்கு வீண் செலவினங்களையும் ஏற்படாத வண்ணம் பணியில் ஈடுபட வேண்டும் என அனைவரின் கோரிக்கையாக உள்ளது.