சமயபுரம் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள உணவு வணிக கடைகள் ஆய்வு

சமயபுரம் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள உணவு வணிக கடைகள் ஆய்வு

 சமயபுரம் கோயிலில் இன்று மற்றும் நாளை நடைபெறவிருக்கும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அதனை சுற்றியுள்ள 71 உணவு வணிக கடைகள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது அதில் 22 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததால் உணவு பாதுகாப்பு துறை பிரிவு 63 இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நான்கு கடைகளுக்கு பிரிவு 55 நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

 மேலும் ஒரு கடைக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆறு கடைகளில் தேதியிடாத மற்றும் காலாவதியான பொருட்கள் 34.5 கிலோ மற்றும் தயாரிப்பு தேதி அச்சிடப்படாமல் விற்பனைக்கு வைத்திருந்த குளிர்பானங்கள் 12.5 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டன.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn