கலைக்காவிரி நுண்கலை பள்ளி சான்றிதழ் மற்றும் பட்டமளிப்பு விழா
கலைக்காவிரி நுண்கலைப் பள்ளி நடத்தி வரும் பகுதி நேர இசை நாட்டியப் பயிற்சிகளின் அரங்கேற்ற விழா 2021 அக்டோபர் 21, 22, 23 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் அக்டோபர் 21ஆம் தேதியன்று நடைபெற்ற பரதநாட்டியச் சான்றிதழ் படிப்பின் 34ஆவது, இசைச்சான்றிதழ் படிப்பின் 30ஆவது அரங்கேற்ற விழாவிற்கு. திருச்சிராப்பள்ளி தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம்(IECD), பாரதிதாசன் பல்கலைக்கழகம் இயக்குநர் பேரா.ஏ.ராமகணேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பரதநாட்டியத்தில் 53பேர். வாய்ப்பாட்டில் 9 பேர், தபேலாவில் 2பேர், கிட்டாரில் 4பேர் என மொத்தம் 68 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் 25 IECD, BDU மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி தலைமையுரையாற்றினார்.
"திருச்சியில் இருஅடையாளங்களாக காவிரித்தாய் மற்றும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி என்றும் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை உலக முழுவதும் பறைசாற்றக்கூடியது கலையே அதை இக்கல்லூரி மிகவும் சிறப்பாக செய்துக்கொண்டு வருகிறது. இக்கல்லூரியின் நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களை பாராட்டுகிறேன்." என்று குறிப்பிட்டார்.
இரண்டாம் நாள் அக்டோபர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற பரதநாட்டியப் பட்டயப் படிப்பின் 34ஆவது, நாட்டுப்புற நடனச்சான்றிதழ் படிப்பின் 5.ஆவது, இசைச் சான்றிதழி படிப்பின் 30.ஆவது. ஓவியச் சான்றிதழ் படிப்பின் 20ஆவது மாணவர்களின் அரங்கேற்ற விழாவில் திருச்சிராப்பள்ளி ஸ்ரீபுரந்தரி நடனம் மற்றும் இசைப்பள்ளி, சாவித்திரி வித்யசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயக்குநர் முனைவர் ஸ்ரீவித்யா சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
பரதநாட்டியம் 22 பேர், நாட்டுப்புற நடனம் 3பேர் இசையில் வாய்ப்பாட்டு ஓ பேர். வயலின் ஒருவர் கீபோர்ட் 5பேர் டிரம்ஸ் 5பேர், ஒவியம் 9பேர் என மொத்தம் 54 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, தலைமையுரையாற்றினார். இவர் தனது தலைமையுரையில் "இக்கல்லூரி திருச்சியிலே அமைந்தது இந்த திருச்சி மாநகரம் பெற்ற பெருமை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆற்றுவிப்பது வரவேற்புக்குரியது கலைதான் நல்லொழுக்கத்தையும் நல்ல பண்பையும் மனிதத்தையும் வளர்க்கும்" என்று குறிப்பிட்டார்.
மூன்றாவது நாளாக அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற பரதநாட்டியம் சான்றிதழ் படிப்பின் 34ஆவது மற்றும் குச்சுப்புடிச் சான்றிதழ் படிப்பின் 6ஆவது மாணவர்களின் அரங்கேற்ற விழாவில் திருச்சி மறைமாவட்ட முதன்மைகுரு Msgr;L அந்துவான் தலைமையேற்று பரதநாட்டியம் 50பேர், குச்சுப்புடி 11பேர் என மொத்தம் 61 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்
“கலைகளின் சங்கமமாக கலைக்காவிரிதிகழ்கின்றது. கலைக்காவிரியில்பயிற்சி பெறுகின்இளம் சிறார்கள்விதைக்கப்படுகிறார்கள். இவர்கள் கலைத்துறையில் வளம் பெறப் போகிறார்கள் என்பதற்கு இந்த கோலாகலமான அரங்கேற்ற விழாதான் சான்று. கலைவழிமனிதம் மலர் எனும் பொதுவான தேச நலனுடன் கூடிய, நல்லிணக்கநோக்கத்தோடு செயலபட்டுவரும் கலைக்காவிரி, வருங்காலத்தில் ஒரு உலகத்தின்முக்கியமான பல்கலைக்கழகமாக உயரப்போவது திண்ணம்" என்று குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாளும் அணிவகுப்போடு தொடங்கிய இந்த விழாவில் அரங்கேற்ற மாணவி ஒருவர் விளக்கை ஏற்றி வைக்க சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றினார்கள். இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இவ்விழாவில் இசை, நடன மாணவ, மாணவிகளின் அரங்கேற்ற கலை உருப்படிகள் மேடையில் நடத்தப்பட்டன.
கலைக்காவிரியின் செயலர் அருள்திரு.S.G.சாமிநாதன் அடிகளார் முதல் நாளும், முதல்வா முனைவர் P.நடராஜன், இரண்டாம் நாளும், அருள்திரு.S.G.சாமிநாதன் அடிகளார் செயலரும், இயக்குநருமான் மூன்றாம் நாளும் வரவேற்புரைவழங்கினர்.
நிகழ்ச்சிகளை கலைக்காவிரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் நடன உதவிப்பேராசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர்.P.நடராஜன் தலைமையில் பகுதிநேர ஒருங்கிணைப்பாளர்களான ஜோசப் ஜெயசீலன், ஓகேஸ்வரி. பெனிட்டா பரலோகராஜ் ஆகியோர் விழா செய்திருந்தனர்