ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண ஜெயந்தி நம்பெருமாள் உறியடி வைபவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண ஜெயந்தி நம்பெருமாள் உறியடி வைபவம் -  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும்.இவ்வாலயத்தில் கிருஷ்ணஜெயந்திவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 'பாஞ்சராத்ர' ஆகமவிதிப்படி நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று துவங்கி 2நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் நாளான இன்று கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி காலை நம்பெருமாள் உபயநாசசியார்களுடன் மற்றும் கிருஷ்ணர் ஆகியோர் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் திருவீதிஉலா வந்து எண்ணெய் விளையாட்டு கண்டருளி அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவர் உறியடி மண்டபத்தில் எழுந்தருளி சேவைசாதித்தனர்.

பின்னர் இரவு பொதுஜனசேவை கண்டருளி, சித்திரை வீதிகளின் வழியாக வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி தெற்குவாசலில் பாதள கிருஷ்ணர் சன்னதி அருகில் உள்ள உறியடி மேடைக்கு வந்தார்.அங்கு அரையர் சேவையினையடுத்து, உறியடி மேடையில் கட்டிவைக்கப்பட்டிருந்த உறியினை ஸ்ரீகிருஷ்ணர் முன்பு யாதவர்கள் உடைத்து நிகழ்த்திய உறியடி வைபவத்தினை கண்டருளிய நம்பெருமாள் மற்றும் கிருஷ்ணர் இரவு மூலஸ்தானம் சென்றடைந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி திருக்கோவிலினுள் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றுவந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் உறியடி வைபவத்தினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து நம்பெருமாள் மற்றும் கிருஷ்ணரையும், யாதவர்களின் உறியடி வைபவத்தையும் கண்டுரசித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO