பெண்களுக்கான உடல் பிரச்சனைகள் தீர்க்கும் மத்தியார்ஜுனேஸ்வரர் கோவில்!!

பெண்களுக்கான உடல் பிரச்சனைகள் தீர்க்கும் மத்தியார்ஜுனேஸ்வரர் கோவில்!!

திருச்சிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேட்டவாய்த்தலை என்ற ஊரில் அமைந்துள்ளது மத்தியார்ஜுனேஸ்வரர் கோவில். இக்கோவில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு மத்யார்ஜுனேஸ்வரர் இறைவனாகவும், அன்னையாக பாலாம்பிகை அம்பாளும் வீற்றிருக்கின்றனர். 

முன்பொரு காலத்தில் இந்த பகுதியில் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பொற்றாளம் பூவாய் சித்தர் மருத்துவம் பார்த்து வந்த நிலையில், ஏற்பட்ட பிரச்சனை தீரவே இல்லை. இதனை பார்த்து மனம் நொந்த சித்தர், இப்பெண்களுக்கு வேறு வழியே இல்லையா, இவர்களை குணப்படுத்தவே முடியாதா? என்று பாலாம்பிகை அம்மையாரிடம் கேள்வி எழுப்ப,

இனிமேல் பெண்கள் பூப்படைதலில் இருந்து அவர்களின் மகப்பேறு, கர்ப்பப்பை பிரச்சனைகள் மற்றும் மாதவிடாய் முடியும் காலம் வரை தன்னுடைய பொறுப்பு என்று கூறியதாக ஐதீகம். அதனால் தற்போது வரை பெண்களின் பல்வேறு பிரச்சனைகளை அன்னை பாலாம்பிகை தீர்த்து வைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

கோவிலுக்கு பிரச்சனையுடன் வரும் பெண்கள் இங்குள்ள சித்தர் சிலையுள்ள ஒரு தூணில் பிரார்த்தனை காகிதங்களை கட்டி வழிபடுகின்றனர். இங்கு கட்டுவதன் மூலம் சித்தர் தினமும் இந்த பிரார்த்தனைகளை அம்பாளுக்கு வாசித்து காட்டுவதாகவும், அதன்மூலம் தங்களுடைய பிரச்சனைகள் குணமாகும் என்று நம்பப்படுகிறது, பிரார்த்தனைக்கான சீட்டு கோவிலையே கிடைக்கிறது. 

கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை.

எப்படி செல்வது : திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் பேட்டவாய்த்தலை அமைந்துள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேட்டவாய்த்தலைக்கு நேரடியான பேருந்தும், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் பேருந்திலும் செல்லலாம். பேட்டவாய்த்தலையில் இறங்கி தேவஸ்தானம் என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஆட்டோ அல்லது டவுன் பஸ்ஸில் செல்லலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision