மாநில அளவில் தூய்மை பராமரிப்பில் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை முதலிடம்
திருச்சி,மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 2021- 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காயகல்ப் - தூய்மையான மருத்துவமனை ஆய்வில் தமிழ்நாடு மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. வீ. மலைத்துரை அவர்கள் கூறியதாவது,
திருச்சி,மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை , திருச்சியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக அதிக பயனாளிகள் பயன் பெறும் மருத்துவமனையாக உள்ளது, சுமார் 5 லட்சம் மக்கள் இந்த மருத்துவமனையின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு தினமும் 1000 நோயாளிகள் வெளி நோயாளிகளாகவும் , சுமார் 210 உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், மாதத்திற்கு 400 பிரசவங்களும் , 300 ஆப்பரேஷன்கள் நடைபெற்று வருகின்றன.
24 நேர அவசர சிகிச்சை பிரிவு 24 நேர தாய் சேய் நல பிரிவு மற்றும் 24 நேர பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் மற்றும் மார்ச் மாதங்களில் தமிழகத்தில் தேசிய வல்லுநர் குழுக்கள் தமிழக அளவில்31 அரசு மாவட்ட தலைமை மனைகளிலும், 278 தாலுக்கா மருத்துவமனைகளிலும்ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த தரஆய்வு எட்டு வகைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகைகளுக்கும் 100 மதிப்பெண் என்ற முறையில் நடைபெற்றது.
கட்டிடங்கள் பராமரிப்பு,
தூய்மை பராமரிப்பு,
மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துதல்,
நோய் பரவலை கட்டுப்படுத்துதல்,
சுகாதார கல்வி
துணைப் பிரிவுகளை பராமரித்தல்
தூய்மை இந்தியா திட்டம்,
பசுமை திட்டங்கள்
போன்ற 8 வகைகளாக பிரிக்கப்பட்டு,
பார்வையிடுதல் ,
ஊழியர்கள் பதிலுரை
நோயாளிகள் பதிலுரை
பதிவேடுகள் பராமரிப்பு
போன்ற 4 முறைகளில் மதிப்பீடு செய்யப்பட்டு ஒவ்வொரு மருத்துவமனைக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 5- ஆம் முதல் 7- ஆம் தேதி வரை 3 நாட்கள் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய வல்லுநர்களால் மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் 92.86 % பெற்று மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை தமிழ்நாடு மாநில அளவில் முதலிடம் பெற்றது. முதல் பரிசாக ரூபாய் 50 லட்சம் திருச்சி மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை பெற இருக்கிறது. இதனையடுத்து 91.86% பெற்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை 2- ஆம் பிடித்துள்ளது. முதல் பரிசு பெறுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இணை இயக்குனர் மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் மருத்துவர்கள் செவிலியர்கள் மருந்தாளுநர்கள் மருத்துவமனை பணியாளர்கள் நிர்வாக பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். மேலும் இந்த பரிசு தொகையின் மூலமாக மருத்துவமனையில் மேலும் பல உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது அடுத்த இலக்காக இருக்கிறது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..