ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் மண்டல பாலபிஷேக பூர்த்தி விழா

ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் மண்டல பாலபிஷேக பூர்த்தி விழா

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில், பகவதி அம்மன், பரிவார தெய்வங்களான மாணிக்க விநாயகர், சிற்றேரி கருப்பு, முனீஸ்வரர், பாம்பாலம்மன், மதுரை வீரன் சன்னதிகளில் செப்.7ல் கும்பாபிஷேகம் நடந்தது.

அதைத் தொடர்ந்து, தினமும் மண்டலாபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. மண்டல பாலபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (24ம்தேதி)  மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கணபதி ஹோமம், பூர்ணாஹூதியும் உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து நேற்று (25ம்தேதி) காலை 8.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை 2ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, மகா அபிஷேகம், மகா தீபாராதனையுடன் மண்டாலபிஷேக பூர்த்தி விழா நடந்தது. தொடர்ந்து பிரசாத விநியோகம், அன்னதானமுமம் நடந்தது. ஏற்பாடுகளை ஆலய விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO