சுற்றுலா தளமாக மாறும் பிராட்டியூர் ஏரி- முட்செடிகளை அகற்றும் பணியை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்

சுற்றுலா தளமாக மாறும் பிராட்டியூர் ஏரி- முட்செடிகளை அகற்றும் பணியை  அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி பிராட்டியூர் ஏரி சுற்றுலாத்தலமாக மாறுகிறது இதனால் திருச்சி மாநகர மக்களுக்கு சிறந்த மாலை வேளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சீரமைக்கப்பட உள்ளது.

திருச்சி மாநகரில் அமைந்துள்ள பிராட்டியூர் ஏரி 110 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும் இந்த ஏரி சுற்றுலா தளமாக மாற்றப்பட உள்ளது இதை ஒட்டி திருச்சி பிராட்டியூர் ஏரியில் முட்செடிகளை அகற்றி தூர்வாரும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்தப் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார்.  இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது..... திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடப்பாண்டு தந்த திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறோம். 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிராட்டியூர் ஏரி செப்பனிட்டு சுற்றுலாத் தலமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

பிராட்டியூர் ஏரியில் பேவர் பிளாக் அமைத்து நடைபாதையாகவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கவும், பெண்கள் பொழுது போக்கும் வகையில் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட உள்ளது. மேலும் பறவைகள் வந்து அமரும் வகையில் மரங்கள் நடப்பட உள்ளது என்றார்.

திருச்சி பிராட்டியூர் சுற்றுலா தளமாக மாற்றப்படுவதன் மூலம் திருச்சியில் பொழுதுபோக்கு அம்சம் குறைவாக உள்ளதாக ஏக்கத்தில் இருந்த திருச்சி மாநகர மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையிலும் இருக்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn