காட்டுத்தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி
மணப்பாறை வனச்சரக அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு காட்டுத்தீ மற்றும் தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி வனப்பகுதிகளில் அதிகரித்து வரும் கோடைகால வறட்சியினால் காடுகள் எளிதில் தீப்பற்றும் அபாயம் இருப்பதால் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் எஸ் சதீஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜி கிரண் ஆகியோரின் உத்தரவின் பேரில் மணப்பாறை வனச்சரக அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் காட்டுத் தீ மற்றும் தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.
உதவி வன பாதுகாவலர் சம்பத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனச்சரகர்கள் ஏ மகேஸ்வரன் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் மணப்பாறை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் பொதுமக்களுக்கும் மற்றும் மாணவ மாணவியர்களுக்கும் வனங்களில் ஏற்படும் தீ முறைகள் குறித்தும் அவற்றை பாதுகாப்பான முறையில் தடுப்பது தீ தடுப்பு கருவிகள் மற்றும் உபகரங்களை எவ்வாறு கையாளுவது தற்காப்பு மற்றும் செயல்முறை பயிற்சிகளை செய்து காண்பித்தனர்.
இதில் பொதுமக்கள் யாரும் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் மற்றும் சிகரெட் பீடி போன்றவற்றை வனப்பகுதியில் எடுத்துச் செல்லவோ பயன்படுத்தவோ கூடாது என்றும் மேலும் ஏதேனும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக 96 29 23 0606 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn