திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்,மத்திய பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படுமா அமைச்சர் நேரு பேட்டி

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் கட்டுமான பணிகள் தொடர்பாக அனைத்து துறை உயர் அலுவலர்களுடன் பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விரைவில்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய முனைய கட்டுமான பணிகள் மார்ச் 15ம் தேதிக்குள் முடிக்க அமைச்சர் நேரு அதிகாரிகளுக்கு உத்தரவு. மார்ச் மாத இறுதியில் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்றார். மத்திய பேருந்து நிலையம்,சத்திரம் பேருந்து நிலையம் வழக்கம் போல் இயங்கும்
மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும் வயலூர் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படும் பஞ்சபூர்ப பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் புறப்பட்டு மத்திய பேருந்து நிலையம் வந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision