சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாட்டம் தாய்மார்கள் பங்கேற்பு

இன்று (21.2.25) சர்வதேச தாய்மொழிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது - தாய் மொழி காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப் பள்ளியில் தாய் மொழி தினம் தாய்மார்களுடன் கொண்டாடப்பட்டது.
மாணவர்கள் அருகே தாய்மார்கள் அமர்ந்து தமிழ் மொழியில் குழந்தைகளுக்கு வாழ்த்துக் கூறினர். குழந்தைகள் அம்மா என்று அழைத்து மகிழ்ந்தனர். என்றும் தாய்மொழியும், தாய் நாடும் எங்களால் காக்கப்படும் என்பதை மாணவர்கள் பேசினர்.இந்நிகழ்வில் அந்த நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், பொறியாளர் ஜெகன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம் ஸ்டான்லி இராஜசேகர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.பள்ளித் தலைமை ஆசிரியர் சகாயமேரி சந்திரா விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision