சகஜமாக முதலைகள் வருவதால் திருச்சி மாவட்ட ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

இன்று (21.02.2025) அதிகாலை 4.00 மணியளவில் மாவட்ட வன அலுவலர் திருமதி S . கிருத்திகா இ.வ.ப அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடி்படையில் உதவி வன பாதுகாவலர்கள் திரு.R. சரவணகுமார் அவர்கள் மற்றும் திரு. காதர் பாட்சா அவர்கள் தலைமையில் திரு.V.P. சுப்பிரமணியம் வனச்சரக அலுவலர் மற்றும் வன பணியாளர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர் இராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் முக்கொம்பு பகுதி கொடியாளம் கிராமம் திண்டுகரை பகுதியில் பதுங்கியிருந்த முதலையை பிடித்து கண்காணிப்பில் வைத்து பிறகு முதலை நல்ல முறையில் பாதுகாப்பான வாழ்விடத்தில் விடப்பட்டது.
தற்சமயம் ஆறுகளில் நீரோட்டம் குறைந்து வருவதால் ஆறு மற்றும் வாய்க்கால்களில் உள்ள முதலைகள் அடிக்கடி கரைப்பகுதிக்கு வருவது சகஜம் அவ்வாறு முதலைகள் தென்பட்டால் உடனடியாக திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தரும்படி பொதுமக்களுக்கு கேட்டுக்கொள்கிறோம்.முதலைகள் நடமாடும் நீர்நிலைப் பகுதிகளில் கவனமாக இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision