தனியார்மயத்தை கண்டித்தும் காலிபணியிடங்களை நிரப்ப கோரியும் எஸ் ஆர் எம் யு தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தனியார்மயத்தை கண்டித்தும் காலிபணியிடங்களை நிரப்ப கோரியும் எஸ் ஆர் எம் யு தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே துறை தனியார் மயத்தை நிறுத்திடவும், அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு முயற்சிகளை கைவிட வலியுறுத்தியும், லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், எட்டாவது சம்பள கமிஷனுக்கு காத்திடாமல் ரயில்வே தொழிலாளர்களுக்கான அகவிலைப்படையை உடனடியாக வழங்கிட வேண்டும், ரயில்வே தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதராமல் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதை கண்டித்தும், எட்டு மணிநேர வேலையை உறுதிசெய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் இன்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

போராட்டத்தின் ஒருபகுதியாக, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு, எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் ரயில்வே பணிமனையில் இருந்து கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து பின்னர் ஆர்மரிகேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே தொழிலாளர்களை மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ரயில்வே தொழிலாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மிகப்பெரிய அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டமாக மாறும் என எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.

பேட்டி : வீரசேகரன் - துணைப் பொதுச்செயலாளர், எஸ்ஆர்எம்யு

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision