திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான இறுதிகட்ட விவாதப் போட்டி: பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பங்கேற்பு:

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான இறுதிகட்ட விவாதப் போட்டி: பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பங்கேற்பு:

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான விவாதப் போட்டி கடந்த டிசம்பர் 5, 6 அன்று “காலநிலை அவசரம்” என்கின்ற தலைப்பில் நடைபெற்றது. அதன் இறுதிப் போட்டி இன்று காலை 10.30 மணியளவில் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நான்கு குழுக்கள் கலந்து கொண்டன. விவாதத்தின் நிறைவாக கல்லூரியின் அதிபர், முதல்வர், ஆகியோர் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறுகையில்….”காலநிலை அவசரம் என்ற தலைப்பு ஒரு சில இடங்களில் மட்டும் பேசவேண்டிய தலைப்பு அல்ல உலகம் முழுவதும் விவாதிக்க வேண்டிய தலைப்பு என்றார். இன்றைய சுற்றுச்சூழல் பாதிப்பினால் 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் 21 மாநகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகி உள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் 45 சதவீத மக்கள் சுற்றுச் சூழல் பாதிப்பினால் தங்கள் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும். சுகாதார சீர்கேட்டினால் ஒவ்வொரு வருடமும் 6 லட்சம் மக்கள் இறக்க நேரிடுகிறது. ஒவ்வொரு மனிதனும் இப்பூமியில் சுற்றுச்சூழல். பாதுகாப்பில் பொறுப்பு வைக்கவேண்டும்.” என கூறினார்.

முதல் பரிசு ரூபாய் 75,000ம் சென்னை லயோலா கல்லூரியும், இரண்டாம் பரிசு ரூபாய் 35,000 மைசூரைச் சேர்ந்த செயின்ட் பிலோமினாஸ் கல்லூரியும், மூன்றாம் பரிசுகளான ரூபாய் 15,000 பெங்களூரைச் சேர்ந்த செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரியும், கோவையைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியும் பெற்றுச்சென்றனர். இறுதியாக ஜீனோ கன்ஸ்டரக்சன் பேட்ரிக் ராஜ்குமார் 10 ஆயிரம் மரக்கன்றுகளை கல்லூரிக்கும் விரிவாக்கத் துறை கிராமங்களுக்கும் நன்கொடையாக வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் சில மரக்கன்றுகளை கல்லூரியிலேயே நட்டார்.