ரெயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது.

ரெயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது.

திருச்சி ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரெயில் டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் திருச்சி ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.

இதில் திருச்சி மேலபுதூரில் உள்ள ஒரு டிராவல்ஸ் ஏஜென்சியில் உரிய அனுமதியின்றி தனது சொந்த ஐ.டி.யில் இருந்து கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகள் விற்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், அந்த கடையின் உரிமையாளரான கருமண்டபம் மாருதி நகரை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (54) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவர் சேவியர் நடத்தி வந்த ஏஜென்சி நிறுவனத்தில் இருந்து ரூ.18 ஆயிரத்து 591மதிப்பிலான 15 ஆன்லைன் ரெயில் டிக்கெட்டுகள், ரூ.16 ஆயிரத்து 501 மதிப்பிலான காலாவதியான 15 ஆன்லைன் பீடுகள் மாறும் ரெயில் டிக்கெட்டுகள் மற்றும் கணினி உதிரி பாகங்கள் என மொத்தம் ரூ.40 ஆயிரத்து 92 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision