திருச்சியில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பயிற்சி நிலையம்

திருச்சியில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பயிற்சி நிலையம்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 22 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ரூபாய் 762.30 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்கள் தொடக்க விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூபாய் 34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.. இதன்பின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி குத்து விளக்கு ஏற்றி தொழிற் பயிற்சி மையத்தினை பார்வையிட்டார். 

இந்நிகழ்வில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் இளங்கோ, நிலைய மேலாண்மை குழு தலைவர் சுகுமார் மற்றும் தொழிற்பயிற்சியின் மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn