திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், ஏப்ரல் – 14 இன்று “சமத்துவ நாள்”

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், ஏப்ரல் – 14 இன்று “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்று, அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாள் என்று கொண்டாடப்படும்” என கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ
அறிவித்ததை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் அன்றும் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, ”சமத்துவநாள் உறுதிமொழி” ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து.
மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், இ.பி.ரோட்டில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் தலைமையில், வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், பி.எம்.சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதன் தொடர்ச்சியாக "சமத்துவ நாள் உறுதிமொழி" ஏற்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள்,
கவிந்தராஜ், செங்குட்டுவன், லீலாவேலு, மூக்கன்,நூற்ஹான், சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி, பகுதி கழகச் செயலாளர் பாபு நீலமேகம் தர்மராஜ் மோகன்
ராஜ்முகம்மது, விஜயகுமார், சிவக்குமார், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, கிளை செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழகத்தினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision