திருச்சி தேசியக் கல்லூரியின் நூலகத்துறை சார்பில் ஒரு நாள் சிறப்பு பயிலரங்கம்;

திருச்சி தேசியக் கல்லூரியின் நூலகத்துறை சார்பில் ஒரு நாள் சிறப்பு பயிலரங்கம்;

திருச்சி தேசியக்கல்லூரியும் புது டெல்லியின் டெல்நெட்டும் (DELNET – Developing Library Network) இணைந்து “நூலகங்களை மேம்படுத்துவதற்கான உத்திகள்: வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள்” என்னும் தலைப்பில் ஒருநாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.இந்தப் பயிற்சிப் பட்டறையில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. சுந்தரராமன் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். தேசியக் கல்லூரி நூலகரும் இப்பயிலரங்கின் அமைப்புச் செயலாளருமான முனைவர் த.சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று, கல்லூரியின் வள மையம் குறித்த விளக்கக்காட்சியை வழங்கினார்.

நூலகத்தின் தகவல் தொழில்நுட்பம் பற்றியும் அதனை கையாளுவதற்கான மின் கற்றல் முறையையும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துதல் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு பயிலரங்கம் நடத்தப்பட்டது.

இப்பயிலரங்கை கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வைதேகி விஜயகுமார் திறந்து வைத்தார். அவர் கூறுகையில்…” நூலகங்கள் புத்தகங்களின் களஞ்சியங்கள் மட்டுமல்ல, இப்போதுள்ள தொழில்நுட்பத்தின் உதவியால் நூலகங்களின் செயல்பாடுகள் தீவிரமாக மாறியுள்ளது.டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் கணினிமயமாதலின் சில விநாடிகளிலே லட்சக்கணக்கான கல்வியறிவை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் கிடைக்கக்கூடிய இந்த வளங்களை அறிவதற்கு நூலகர்கள் அனைவரும் தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும். இது அவர்களின் திறமைக்கு விட்டிருக்கும் சவாலாகும்” என குறிப்பிட்டார்.

டெல்நெட் ஆலோசகர் திரு. ஓ.என்.சபபுரி அவர்கள் கூறுகையில் ” டெல்நெட் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6700-க்கும் மேற்பட்ட நூலகங்களை இணைக்கிறது. இது தெற்காசியாவின் ஒரு முக்கிய வளப்பகிர்வு வலையமைப்பாகும். மேலும் அச்சு நூல்கள், மின் இதழ்கள், மின் நூல்கள் போன்ற 3 கோடிக்கும் அதிகமான பதிவுகளை வழங்குகிறது.
டெல்நெட்டின் புதிய சேவை மற்றும் அறிவு பெறுபவர் போர்டல், திறந்த நிலை மென்பொருள், நூலக செயல்பாட்டிற்கான டெல்பஸ் மென்பொருள் போன்ற பல்வேறு வளங்களை நூலகங்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என அறியலாம்” என்றார்.