திருச்சி காவேரி மருத்துவமனை நடத்தும் இணையவழி மாரத்தான் ஓட்டம்

திருச்சி காவேரி மருத்துவமனை நடத்தும் இணையவழி மாரத்தான் ஓட்டம்

திருச்சி காவேரி மருத்துவமனை, CII மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை இணையவழியில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த மாரத்தான் ஓட்டம் வருகிற அக்டோபர் 11ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இணைய வழியில் நடைபெறும். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்பவர்கள் தங்களுடைய முழு விவரங்களை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் ரூபாய் 200 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் நாம் சாதாரணமாக தொடர்ந்து செய்துவரும்   ஓட்டப்பயிற்சி நேரத்தையோ, வீட்டிலோ அல்லது உடற்பயிற்சி கூடங்களில் எடுத்துக்கொள்ளும் நேரத்தை கணக்கிட்டோ எப்படி வேண்டுமானாலும் இதில் நாம் பங்கு கொள்ளலாம்.

அன்றாட செயல்பாடுகளை கணக்கிடும் செயலிகளான (Strava, Nike run club, Garmin, Mapmyrun, adidas running)   போன்ற செயலிகளில் ஒன்றின் மூலம் கணக்கிட செய்துக்கொள்ளலாம். பதிவு செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் பதிவு எண்ணில் தினமும் அந்த அளவை தொடர்ந்து காவேரி மருத்துவமனை இணையதளத்தில் (www.kauveryhospitalvirtualmarathon.com) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தொடர்ந்து  சரியான நேரத்திற்குள் பதிவேற்றம் செய்பவர்களுக்கு டீசர்ட், பதக்கம் மற்றும் பங்கேற்பாளர் சான்றிதழ் ஆகியவை மருத்துவமனை சார்பில் வழங்கப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்துக்கொள்வதோடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு முயற்சியாக இதனை காவிரி மருத்துவமனை முன்னெடுத்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn