பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பவருக்கு விருது - ரூ.1லட்சம் நிதி ஒதுக்கீடு - ஆட்சியர் தகவல்

பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பவருக்கு விருது - ரூ.1லட்சம் நிதி ஒதுக்கீடு - ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..... தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்டபொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை ஏறும்விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்ற இனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி எளிதாக மரத்தில் ஏறுவதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்கும் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்கள் சிறந்த பனை ஏறும் இயந்திரம்/கருவி கண்டுபிடிப்பவர் ஒருவருக்கு விருது வழங்க ரூ.1லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பாளர்கள் தோட்டக்கலைத்துறையால் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

எனவே பனை ஏறும் இயந்திரத்தைகண்டுபிடிக்கும் தன்னார்வலர்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் www.tnhorticulture.gov.in என்றஇணையதளம் வாயிலாக விருது பெறுவதற்கு மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision